உலகின் முதல் பெண் பிரதமர். கமலஹாசன் தெரிவித்த தகவலால் ஏற்பட்ட சர்ச்சை!

உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின் போது மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமலஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.  உலகின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமை இலங்கைக்கு உரியதாகும்.

இந்த நிலையில் அரசியல்வாதியாகவும் பலரும் ரசிக்கக்கூடிய நடிகர் கமலஹாசன் இவ்வாறான தவறான தகவலை வெளியிட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என கமலஹாசன் கூறியிருக்க கூடும் என்று சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கமலஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வந்துள்ளனர். இருப்பினும் இது தொடர்ந்து கமலஹாசன் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதுடன் அடுத்த வார நிகழ்ச்சியில் இதற்கு பதில் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *