விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இதுதான்! மீண்டும் சமஸ்டிக்கான ஒரு வழி.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்போதுதான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் உடனான கலந்துரையாடல்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பு குறித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை பொருளாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அரசாங்கம் இன பிரச்சினை தீர்வுக்கு முயற்சிக்கும் என்பதால் புலிகள் அப்படி செய்யப்பட்டார்கள்.
புலிகள் எதை குறி வைத்து தாக்கினார்களோ அது தற்போது தான் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் தமது முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தை ஆகபூர்வமானதாக இருந்தால் சமஷ்டி அடிப்படையில் ஆன தீர்வு பற்றி ஜனாதிபதி சிங்கள மக்களிடம் பகிரங்கமாக பேச வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனை ஒரு எல்லையைத் தாண்டி எட்ட முடியாத இடத்திற்கு கொண்டு செல்லப்படும் அபாயம் உள்ளது. ரணிலின் அழைப்பை ஏற்று நிபந்தனை இன்றி பேச்சில் கலந்து கொள்ள உள்ள தரப்புகள் தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார்.