மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகர சபை எல்லைக்கு உட்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடபடவெண்டும்!
மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகர சபை எல்லைக்கு உட்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு இன்று (13.12.2022) முதல் வார காலத்திற்குள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால் நடைகள் உயிரிழந்த காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
கிழக்கில் திடீர் என முடபடும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இது தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால் நடை உயிரிழந்து உள்ளமைக்கான காரணத்தை கண்டறிய இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட உள்ளத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மாட்டு இறைச்சி , ஆட்டு இறைச்சி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.