மீண்டும் புயல் சாத்தியம்!
இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தமான் தீவைச் சூழ காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.