சிம்புவிற்கு திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் விளக்கம்.
சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம் என்று செய்தியாளர்கள் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரரிடம் கேள்வி எழுப்பிய போது, என் மகனுக்கு பிடித்த பெண்ணை நானோ , என் மனைவியோ தேர்ந்தெடுப்பதை விட என் மகனுக்கு பிடித்த மணமகளை இறைவன் தான் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
என்னை யார் பார்த்தாலும் உங்கள் மகனுக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இறைவன் அருளால் நடக்க வேண்டும். சிம்புவின் ரசிகர்களின் அன்பால் திருமணம் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.