மீண்டும் ஆரம்பமானது பலாலி விமான நிலையம்.
யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் மீண்டும் சென்னை நோக்கிச் சென்றுள்ளது.
14 பயணிகளுடன் பலாலிக்கு வந்த விமானம் மீண்டும் 11 பேருடன் சென்னை நோக்கி பயணித்துள்ளது.
யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை கடந்த நல்லாட்சி காலத்தில் ரணில் அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் தற்போது ரணிலின் அரசாங்க காலத்தில் மீண்டும் சென்னை மற்றும் பலாலிக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து இடம்பெறும் என்று தெரிவித்துள்ளனர்.