GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடல் மூலமே இலங்கைக்கு அதிகளவான போதை பொருள் கடத்தப்படுகின்றது மீனவர்கள் தெரிவிப்பு!
கடல் மூலமே அதிகளவான போதை பொருள் இலங்கையின் வடக்குக்கு அதிகமாக கொண்டு வரப்படுகின்றன என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் வழியாக ஹெராயின், ஐஸ், மருயுவனா, கேரளா கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கடல் வழியாக போதைப் பொருளை கடத்துவதன் மூலமாக மீனவர்கள் தமது தொழில் பாதிப்புக்கு உள்ளாகின்றது என தெரியப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான போதைப் பொருள் கடத்தலுக்கு இந்தியா அங்கத்தவர்களும் உடந்தையாக இருக்கக்கூடும் எனக் கூறி அவர்கள் கடத்தல் தொழிலினை GPS பவனையின் அடிப்படையில் மேற்கொள்கின்றர்கள் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.