இந்த வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு!

நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மத்திய வகுப்பை சேர்ந்த மக்களே அதிகளவில் தமது தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக மக்கள் இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மக்கள் அனுமதிப்பெற்ற நிறுவனங்களிடம் மாத்திரமல்லாது பணத்தை அதிகமாக வழங்கும் நிறுவனங்களிடமும் தமது தங்க ஆபரணங்களை அடகு வைத்து வருவதாக ஆய்வில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *