கிளிநொச்சி அனைவராலும் விரும்பத்தக்க சுற்றுலா தளம்!
கிளிநொச்சி- இயற்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும். இப் பண்ணை சுமார் 120 – 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த றீ(ச்)ஷா பண்ணையின் ஒரு பகுதியாகவே குறிஞ்சி தங்ககம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு குடும்பமாக வருகைதந்து தங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.
இங்கு தங்குவதற்கு குறிஞ்சி தங்ககம் மற்றும் றீ(ச்)ஷா பண்ணை என இணையத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
சில விளையாட்டுதளங்களும்,குதிரை சவாரி, ஆட்டு மந்தை, மாட்டு பட்டி, தாரா, கோழி பண்ணைகளும் அமைந்துள்ளது . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.