(இறந்தவர்களே உயிர்ப்பிக்க செய்யுமா?)யாழ் இளைஞனின் செயற்கை இதய கண்டுபிடிப்பு!
யாழ் மாவட்டத்தில் ஊர்காவல் துறையைச் சேர்ந்த ச.கோகுலன் எனும் இளைஞன் Heart of 2009 எனும் பெயரில் செயற்கை இதயம் எனும் படைப்பை உருவாக்கியுள்ளார்.
இப்படைப்பு மக்களுக்கு பயன்பெறக்கூடிய படைப்பாக காணப்படும் என அவர் கூறியுள்ளார். அதாவது அவர் தெரிவிக்கையில் இதயம் செயலிழந்தவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள் போன்றோருக்கான கருவியாக இது அமைந்துள்ளது என அவர் கூறுகின்றார்.
குருதி சுற்றோட்டம் வென்றவர்களுக்கு சீராக குருதியை வழங்குவதற்காகவும் ஒக்சிசன் சுவாசிக்க முடியாதவர்களுக்கு சீராக ஒக்சின் சுவாசத்திற்கு உதவுவதாகவும் இது காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் சுய இழந்தாலும் கூட இந்த கருவியை பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தான் இப்படைப்புக்கு 2009 இன் இதயம் எனப் பெயர் சூட்டிதன் காரணம் 2009 ஆம் ஆண்டு ஈழ நாட்டு பிரச்சனையின் காரணமாக தான் நிறைய இதயங்களை இழந்துள்ளதாகவும் அதனால் இப்படைப்புக்கு இந்த பெயர் பொருத்தமாக அமையும் என தான் நினைத்திருந்ததாகவும் கூறுகின்றார்.