முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது.

நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் தற்போது முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
அரசாங்கம் முட்டை விலையை அதிகரிக்கும் என்று சில வியாபாரிகள் தற்போது வேண்டுமென்றே முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

தற்போது போதுமான அளவு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் எதிர்வரும் மாதங்களில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படும் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவி்த்துள்ளார்.

50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யவே, கொள்வனவு செய்யவே கூடாது என அரசாங்கம்அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் கட்டுப்பாட்டு விலையை விடக் குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *