2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது இரண்டு அணிகள் .
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன.
கத்தாரில் இடம்பெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நேற்றைய தினம் நடைபெற்றன.
முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் பெனால்டி மூலம் குரோஷியா 4:2 விகிதத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதேவேளை இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த அணியும் பெனால்ட்டி வாய்ப்புகள் மூலம் 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆர்ஜெண்டினா அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது
இதனடிப்படையில் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் இரு அணிகளாக குரோஷியா மற்றும் ஆர்ஜெண்டினா காணப்படுகின்றன.