இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் வளிமண்டல மாசு!
இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் வளிமண்டலமாசு நேற்று படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது.
மண்டோஸ் சூறாவளியினால் இந்தியாவிலிருந்து அதிகளமான மாசுகள் இலங்கையை சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்சைய ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிக குளிருடன் கூடிய வானிலை காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாசுக்கள் இன்று முதல் குறைவடையும் என்று வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.