சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. இலங்கையின் முதல் முறையாக இவ்வாறான நிலை உருவாகி உள்ளது. இதன் போது சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வயோதிபர் ஒருவர் கடும் குளிர் காரணமாக மரணமடைந்துள்ளார்
குறித்த சம்பவம் நேற்று (08.12.2022) சிவனொளிபாத மலை உச்சியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்
வயோதிபர் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 96 வயது மதிக்கத்தக்க வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.