யாழ் நகர் வரவேற்பு பாதையில் 7 அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது!

செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை நேற்று முன்தினம் (07.12.2022) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

குறித்த பிரதிஷ்டை நிகழ்வு தொடர்பாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்திருப்பதாவது யாழ் நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.

அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *