இலங்கையின் தொழில் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களால் நடாத்தப்பட்டுள்ள கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக் கற்கை நெறிகள் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் பயிற்சி நிலையம் கச்சேரி, பளை, நாச்சிகுடா மற்றும் கண்டாவளை ஆகிய தொழில் பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.
தேசிய தொழில் தகமை மட்டும் நான்கு அல்லது மூன்று குடியை கற்கும் நெறிகளுக்குமே விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.