2023 பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டு முதல் சாதாரண தர பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு 8ம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலைவாய்ப்புகளை தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்க வேண்டும். இந்த வளர்ச்சியை தயாரிக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தரம் 10இல் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நிபுணர்களின் குழுவின் பரிந்துரையின் பெயரில் தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.