ஆரஞ்சு பழத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு.

இலங்கையில் ஆரஞ்சு பழத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு.
நாட்டில் தற்போது இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக சகல பொருடகளும் விலை உயர்வாக காணப்படுகிறது. ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 2000 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று ஆரஞ்சுகள் 120 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சுகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன. இதனால் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்கு ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் விலை அதிகரிப்பால் வியாபாரிகள் கெள்வனவும், விற்பனையும் மந்த நிலையில் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *