நாடகம் பார்த்ததற்காக சிறுவர்களுக்கு மரண தண்டனையா?
வடகொரிய நாடு பல கட்டுப்பாடுகளை கொண்டதாக காணப்படுகின்ற போது வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
சமூக ஊடகங்கள் வடகொரியாவில் இல்லை என்பதால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து வெளி உலகத்திற்கு தெரியாது. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சிதான் வடகொரியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக 16 மற்றும் 17-வயதுடைய பள்ளி மாணவர்கள் இருவருக்கு மரண தணடனையை வடகொரியா நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.