மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்குதல் ஒருவர் உயிரிழந்துள்ளார்!
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வாலைச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இக்காட்டு யானை தாக்கத்தினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு தேக்கக் காடு சந்தியில் 120வது மையில் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என பிரதேச மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனையை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.