பாடசாலை மாணவிகளே அதிகம் போதை பொருள் பயன்படுத்தி வருகின்றார்கள்!
பாடசாலை மாணவர்கள் மட்டுமல்ல பாடசாலை மாணவிகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகி இருந்த போதும் தற்போது அது கிராமப்புற பாடசாலைகளிலும் பரவி உள்ளதாக அவர் கூறினார்.
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில் தங்கி இருப்பதாகவும் அவர்களில் பலர் துஷ்பிரயோக சம்பவங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.