மாலை உருவாகும் புயல் இந்திய கரையோரபகுதியில் கரையை கடக்கும்.
இன்று மாலை உருவாகும் புயலானது இந்திய கரையோரபகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
மாலை உருவாகிறது புயல்
சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு
அவர் மேலும் கூறுகையில், அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் அவற்றை சூழ உள்ள இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்து 9ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி , சேலம், தர்மபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் , 9ஆம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் ஆதி கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
காற்றின் அளவை பொறுத்த வரையில் கடலோர பகுதிகளில் காற்று வீசும் எனவும், 8ஆம் தேதி மாலை முதல் 9 மாலை வரையில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் எனவும், 10ஆம் தேதியில் மணிக்கு 70- 80 கிமீ காற்று வீசும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.