பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்த மாணவர்கள் உட்பட நால்வரை போலீஸார் விசேட அதிரடி படையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 13g ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதை மாத்திரைகளை போலீஸார் விஷேட அதிரடி படையினர் கைப்பற்றினர். கொறன மிலேனிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 18 மற்றும் 33 வயது உடையவர்கள் எனவும் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஊடாகவே ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *