நாட்டில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணாவிடின் சர்வதேச சந்தையுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது கடினமாகி விடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் வெளிநாட்டில் கையிருப்பை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தற்போதுள்ள டொலர் நெருக்கடியை ஏதேனும் ஒரு சொத்தை விற்பனை செய்து தீர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலை செய்யும் திறனை இழந்து விடும் , அத்துடன் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு விடும் எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியினை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . இவ்வாறான சொத்துக்களை விற்பனை செய்வதில் நாம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.