சோம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது!
ஜாம்பி வைரஸ் என்பது ஏறக்குறைய 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒற்றை செல் அமீபா வைரஸ். இந்த வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்குமா என்பது இதுவரை ஆய்வுகளில் இல்லை.
இந்த ஜாம்பி வைரஸ் குறித்து முழுமையான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை என்றாலும், மனிதர்களுக்கு இந்த ஜாம்பி வைரஸால் பேராபத்து ஏதும் வருமா என்பது உறுதியாகக் கூற முடியாத நிலையில்தான் ஆய்வாளர்கள் உள்ளனர்.
மனிதர்களின் செயல்பாடுகளால் பருமநிலையில் மாற்றம் ஏற்படும்போது, புவி வெப்பமடைகிறது. புவியின் வெப்பத்தால், பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து மனிதர்கள் வாழும்பகுதியில் நீர் சூழ்கிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், பனிப்பாறைகள் உருகும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பனிப்பாறைகளுக்குள் அமைதியாக தூங்கிக்கொண்டு, உயிர்பெறமுடியாமல் இருக்கும் கொடிய வைரஸ்கள், அதற்குகிய சூழல் கிடைத்தவுடன் மீண்டும் உயிர்பெற்றுவிடும்.
ஒருவேளை மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் சாத்தியம் இந்த வைரஸ்களுக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் விளைவு மோசமானதாக இருக்கும்.