கச்சா எண்ணெய்யுடன் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல். தாமத கட்டணம் பெருந்தகை
கச்சா எண்ணெய்யை ஏற்றிவந்த இரண்டு கப்பல் மூன்று நாட்களுக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான தாமத கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. செலுத்தும் கட்டணம் டொலர்களில் செலுத்தவேண்டும்.
குறித்த கப்பல் ஒன்றுக்கு நாளாந்தம் ஒன்றரை லட்சம் டொலர் வீதம் இரண்டு கப்பல்களுக்கும் தாமதக் கட்டணம் தலா முன்று இலட்சம் செலுத்தப்படுவதாக எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்க பிரமுகர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சப்புகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருப்பதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தரையிறக்கப்பட்ட கச்சா எண்ணெய் இதுவரை சுத்திகரிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
தற்போதைக்கு வருகை தந்துள்ள கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வரப்பட்டுள்ள போதிலும், தற்போதைய நிலையில் தரையிறக்கி களஞ்சியப்படுத்த முடியாது என்றும் எண்ணெய்த் தாங்கிகளில் பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதே அதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.