சீனா வேண்டவே வேண்டாம்! Apple (iphone) company
குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் போட்டிப் போட்டு வாங்குகின்றனர். இந்த ஐபோன்களை பாக்ஸ்கான் என்ற தொழிற்சாலை தயாரித்து விற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய பாக்ஸ்கான் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை சீனாவின் செங்ஷோ என்ற நகரில் உள்ளது. சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் 85 சதவீத ஐபோன்கள் ஒரு கட்டத்தில் தயாரிக்கப்பட்டன. எனவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான உற்பத்தி மையமாக சீனா திகழ்கிறது.
தற்போது சீனாவில் நிலவரம் அசாதாரண சூழ்நிலை காரணமாக சீனாவில் இருந்து வேறு நாட்டிற்கு ஆப்பிள் நிறுவனத்தை மாற்றுவதற்காக ஆப்பிள் நிறுவனம் திட்டம்தீட்டி வருகின்றது.