இரகசியமாக நண்பனுக்கு குடிநீரில் மதுபானம் கலந்து கொடுத்தமையால் கிளிநொச்சியில் தனியார் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

கிளிநொச்சி நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவருக்கு அவரது நண்பர்களால் தண்ணீருக்குள் மதுபானம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவனின் நண்பர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாலும் அவ் மாணவன் எந்தவித போதை பழக்கமும் இல்லாத காரணத்தினால் அம் மாணவனுக்கு தண்ணீரில் மதுபானத்தை கலந்து பருக்கிய நிலையில் குறிப்பிட்ட மாணவன் போதையால் தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதனால் கிளிநாச்சி வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பாதிக்கப்பட்ட உள்ள மாணவன் எந்தவித போதைப் பொருட்களும் பாவிக்காதவனாகவும், கல்வி நடவடிக்கைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவனாகவும் காணப்படுகின்றான்.

மேலும் அம் மாணவனுக்கு கட்டாயத்தின் பேரில் போதை ஊட்டியதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் போலீஸ் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை முழுவதும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது பெருகிக்கொண்டே வருகின்றது இதனால் முதல் எமது பிள்ளைகளை எமது கண்ணோட்டத்தில் கவனமாக பார்த்துக் கொள்ளவும். இன்றைய சிறுவர்கள் நாளைய நமது தலைவர்கள் அவ்வாறான தலைவர்களை நாம் போதைப் பொருள் பாவனை மூலம் இழந்து விடக்கூடாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *