வியட்னமில் உயிரிழந்த நபரின் உடலை இலங்கைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை!

 

சட்டவிரோதமாக கனடா சென்ற கப்பலினால் வியட்னமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்துள்ள தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கப்பலில் பயணித்த இலங்கை அகதிகள் சிங்கப்பூர் அதிகாரிகளினால் மீட்கப்பட்டு வியட்நாம் கொண்டு செல்லப்பட்டனர். அகதிகள் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அவர்களின் இருவர் தம்மை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் எனும் இளம் குடும்பஸ்தன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது உடலை மீண்டும் இலங்கைக்கும் கொண்டு வருவது தொடர்பில் அவரது குடும்பத்தார்கள் பல வேண்டுகோள்களை விடுத்துள்ளார்கள் இன் நிலைமையில் அரசாங்கம் சர்வதேச புலம்பெயர் அமைப்புடனும் வியட்நமிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக வியட்னமிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *