எதிர்வரும் 12ம் திகதி பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பம்!
பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் மார்கழி 12ஆம் தேதியில் இருந்து ஆரம்பமாக உள்ளது என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் மூடப்பட்ட பலாலி விமான நிலையம் ஆனது 2019 அக்டோபர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட போதும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட விமான நிலையம் ஆனது மீண்டும் 2022 மார்கழி 12ம் திகதியிலிருந்து செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் என பலாலி விமான நிலையம் காணப்படுகின்ற வேளையிலே எதிர்வரும் 12-ம் தேதியில் இருந்து வாரத்திற்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்