யாழில் மருத்துவரின் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக காரில் பயணம் செய்த 26, மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், மருத்துவர் என்பதை குறிக்கும் காரை வழிமறித்து ஆவண சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது காரில் இருந்தவர்களின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த நிலையில் அவர்களையும் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
இந்நிலையில் காரின் சாரதியிடமிருந்து 600 மில்லி கிராம் ஹெரோயினும் அவருடன் பயணித்தவரிடமிருந்து 430 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.
காரின் சாரதியின் சகோதரர் மருத்துவர் என்பது விசாரணைகளின்போது தெரியவந்தது.