வேலையை இழக்கும் அபாயம்! திணறும் 5000 உழியர்கள்
எதிர்வரும் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் மின்வெட்டு மின்சார கட்டணம் காரணமாக நாட்டில் உள்ள ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம். ஆகையால் தொழிலாளர்கள் வேலை இழக்கவும் முதலாளிகள் நாட்டை விட்டு வெளியேறவும் நேரிடலாம். இரட்டிப்பாகும் மின்சார கட்டணமும் விலையுயரும் இதர பொருட்கள் காரணமாக 3 ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் 5000 உழியர்கள் வேலை இழக்க நேரிடும். அத்துடன் முதலீட்டாளர்கள் தமது தொழிலை விடுத்து இந்தியா செல்வதாகவும் தகவல் அறியப்படுகிறது. தொழிற்சாலைகள் தொடர்ந்து சேவையை மேற்கோள்ள முடியாமல் உள்ளதாகவும் முதலீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விலை அதிகரித்தது வருவதால் ஏனைய நாடுகளின் உற்பத்தி பொருள்ட்களுடன் போட்டி இடும் போது இலங்கை உற்பத்தி பொருட்கள் விற்பனை திறன் குறைந்துள்ளது.
தொழிலாளர்கள் திணைக்கள சட்டத்தின் படி ஒரு தொழில் நிறுவனம் மூடப்படும் போது அங்கு பணி புரியும் ஒரு உழியருக்கு 12 – 25 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது