பாடசாலைகளுக்கு அருகில் குவிக்கப்பட்ட அதிரடி படையினர்.
அதிகமாக போதை பொருள் பாவனை காரணமாக பாடசாலைகளுக்கு அருகில் பாதுகாப்பிற்காக அதிரடி படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே போதை பொருள் பாவனை அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களை கண்காணிப்பதற்காகவும் போதை பொருள் பாவனை கட்டுபடுத்தவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு அருகில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்வதற்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது எந்த நேரத்திலும் முறைப்பாடுகளை செய்வதற்கு (0112580518) இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.